தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை - Thevanuke Magimai

தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை - Thevanuke Magimai

தேவனுக்கே மகிமை
தெய்வத்திற்கே மகிமை
தேடி வந்து மீட்டவரே
தினம் உமக்கே மகிமை - என்னை

ஐயா வாழ்க வாழ்க உம் நாமம் வாழ்க‌

1. உன்னதத்தில் தேவனுக்கே
மகிமை உண்டாகட்டும் - இந்தப்
பூமியிலே சமாதானமும்
பிரியமும் உண்டாகட்டும் --- ஐயா

2. செவிகளை நீர் திறந்து விட்டீர்
செய்வோம் உம் சித்தம் - இந்தப்
புவிதனிலே உம் விருப்பம்
பூரணமாகட்டுமே --- ஐயா

3. எளிமையான எங்களையே
என்றும் நினைப்பவரே - எங்கள்
ஒளிமயமே துணையாளரே
உள்ளாத்தின் ஆறுதலே --- ஐயா

4. தேடுகிற அனைவருமே
மகிழ்ந்து களிகூரட்டும் - இன்று
பாடுகிற யாவருமே
பரிசுத்தம் ஆகட்டுமே --- ஐயா

5. குறை நீக்கும் வல்லவரே
கோடி ஸ்தோத்திரமே - பாவக்
கறை போக்கும் கர்த்தாவே
கல்வாரி நாயகனே --- ஐயா



thevanukke makimai
theyvaththirke makimai
thedi vanththu midtavare
thinam umakke makimai - ennai

aiya vazka vazka um namam vazka‌

1. unnadhaththil thevanukke
makimai undakaddum - inthdhab
bumiyile chamathanamum
biriyamum undakaddum --- aiya

2. sevikalai nir thiranththu viddir
seyvom um sithdham - inthdhab
buvidhanile um virubpam
buranamakaddume --- aiya

3. elimaiyana engkalaiye
enrum ninaibpavare - engkal
olimayame thunaiyalare
ullaththin aarudhale --- aiya

4. thedukira anaivarume
makiznththu kalikuraddum - inru
badukira yavarume
parisuthdham aakaddume --- aiya

5. kurai nikkum vallavare
kodi sa்thoththirame - bavak
karai bokkum karththave
kalvari nayakane --- aiya